சிவகாசி பட்டாசுகள் வெடித்து விபத்து; 2 பேர் படுகாயம், 3 பேர் மாயம்
சிவகாசி சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்த்தி 2 பேர் படுகாயம் அடைந்தனர் 3 பேரைக் காணவில்லை.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டிடம் தரைமட்டமானது. இந்த விபத்தில் படுகாயங்களுடன் இருவர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை காணவில்லை.
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் ராமநாதன் என்பவருக்கு சொந்தமான பைப் தயாரிக்கும் கம்பெனி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை அக்கட்டத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்துச் சிதறின இந்த விபத்தில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
ALSO READ | திருப்பூர் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் படுகாயங்களுடன் இருவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு இருந்ததாகக் கூறப்படும் மூன்று பேரை கட்டிட இடிபாடுகளுக்கிடையே தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கட்டிடத்தில் மீதமுள்ள பட்டாசுகள் வெடித்த வண்ணம் உள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் ராமநாதன் தப்பி ஓடியதாக கூறப்படும் நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ | வேலூர் அருகே மழையின் காரணமாக பாறை உருண்டு விழுத்ததில் இருவர் உயிரிழப்பு.
தீபாவளி விற்பனை முடிந்த பின்னர், மீதமுள்ள பட்டாசுகள், பின்னர் விற்பனை செய்ய வைக்கப்பட்டதாகவும், அனுமதி இல்லாத கட்டிடத்தில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ALSO READ | தமிழகத்திற்கு பயணிக்க கொரோனா சான்றிதழ் கட்டாயம் இல்லை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR