தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர்ச மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு என முதல்வர் அறிவிப்பு.
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு என முதல்வர் அறிவிப்பு.
தற்போது உள்ள ஊரடங்கு வரும் திங்கள் (ஜூலை 18 ஆம் தேதி) காலை நிறைவடையும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தடை மற்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள்:
- மாநிலங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை.
-திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
- மதுக்கூடங்கள், சமுதாய, அரசியல் கூட்டக்களுக்கு தடை தொடர்கிறது.
- பள்ளிகள், கல்லூரிகள், கவ்லி நிறுவனங்கள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றை திறக்க தடை தொடர்கிறது.
- பொழுதுபோக்கு மற்றும் கலை, விளையாட்டு கலாச்சாரம் போன்ற நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது.
- திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.
- இறுதிச்சடங்கில் 20 பெர் மட்டுமே பங்கேற்க வெண்டும் என்ற கட்டுப்பாடும் தொடர்கிறது
கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
- கடைகளில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயம் வைக்க வேண்டும்.
- கடைக்கு வருபவர்களை உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும்.
- கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
- கடைகளில் சமூக இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR