பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி சென்னையில் காலமானார்!
சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று இரவு 11.40 மணியளவில் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று இரவு 11.40 மணியளவில் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக கிட்னி தொடர்பான உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி நேற்று சென்னை மருத்துவமனையில் காலமானார்.
87 வயதான பாக்கியம் ராமசாமி சென்னையிலுள்ள சேத்துபட்டில் வசித்து வந்தார், நீண்ட காலமாக கிட்னி தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் காலமானார்.
அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி சடங்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று பகல் 11.30 மணிக்கு நடந்தது .மறைந்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி அவர்களுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.
இவர் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரங்கள்தான் அப்புசாமி, சீதாப்பாட்டி என்ற பாத்திரங்களின் மூலம் அறிமுகமான இவருக்கு தமிழ் அறிஞர்கள், வாசகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாக்கியம் ராமசாமி,அப்புசாமியும் அற்புத விளக்கும், அப்புசாமியும் 1001 இரவுகளும், அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் ஆகிய நாவல்கள் அவருக்கு பெரும் பெயர் வாங்கித் தந்த நாவல்களாகும்.அதன் பின்,குமுதல் வார இதழில் 37 ஆண்டுகள் பணியாற்றிய இவர்;1990-ல் ஓய்வு பெற்றார்.
மேலும், இவர் சிறுவர்களுக்காக வால்ட் டிஷ்னி தயாரித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற கார்டூன் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
இலக்கிய உலகம் வாசகர்களுக்கு ஆர்வத்தை மேம்படுத்திய பாக்கியம் ராமசாமி மறைவு வாசகர்களையும், இலக்கிய உலகத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரை சிரிக்கவைத்த அவர் இனி அவர் உருவாக்கிய படைப்புகளின் வழியே மட்டுமே உயிர் வாழ்வார்.