விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் வெளிப்படைத் தன்மை தேவை : ஸ்டாலின்
வெளிப்படையான நிர்வாகத்தை ஆளுங்கட்சி தர வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவதாக கூறினார். ஆளுங்கட்சியின் கொள்கை விளக்கமாக ஆளுநர் உரை இருக்க கூடாது என்பது மரபு. ஆளுங்கட்சியின் நிர்வாகத்தை கண்காணிக்கவே மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளதாக கூறினார். ஆளுங்கட்சி, எதிர்கட்சி இடையே வெற்றி வித்தியாசம் பெரிதாக இல்லையென்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சட்டசபையில் கவர்னர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது. அப்போது தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் பேசியதாவது: வெளிப்படையான நிர்வாகத்தை ஆளுங்கட்சி தர வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவதாக கூறினார். ஆளுங்கட்சியின் கொள்கை விளக்கமாக ஆளுநர் உரை இருக்க கூடாது என்பது மரபு. ஆளுங்கட்சியின் நிர்வாகத்தை கண்காணிக்கவே மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளதாக கூறினார். ஆளுங்கட்சி, எதிர்கட்சி இடையே வெற்றி வித்தியாசம் பெரிதாக இல்லையென்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேசிய வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்வதில் வெளிப்படைத் தன்மை தேவை என கூறியுள்ளார்.