தென்மேற்கு வங்கக் கடலில் பெரும் புயல் உருவாகி உள்ளது. தற்போது, ​​புதுச்சேரியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னையில் பெய்த கனமழையால் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சென்னை விமான நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது, சில சுரங்கங்களிலும் தண்ணீர் நிரம்பியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நாகையில் புயல் காரணமாக 50 கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிப்பு


துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு


ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக காலை முதலே மழையும் பலத்த காற்றும் வீசி வருகிறது. மழைநீரை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தணடையார்பேட்டை ஆர்கே நகர் பகுதிகளில்மழை நீர் தேங்கி இருநத நீலையில், மோட்டார் மூலமாக அவற்றை எல்லாம் அருகாமையில் இருக்கும் பக்கிங்காம் கால்வாயில் கொண்டு சென்றனர். இந்நிலையில்  கொருக்குபபேட்டை பகுதியை ஒட்டி அமைந்துள்ள பக்கிங்காம் கால்வாயை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோரோடு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


மாநகராட்சி சார்பில் உணவு


சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரை, பெரிய நீலாங்கரை பகுதிகளில் வசித்து வரும் மீனவ மக்கள் சுமார் 8000 பேருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் உணவு இரவு வழங்கப்பட்டு வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலோர மீனவ பகுதியில் கனமழை பெய்து வந்த நிலையில் மீனவ மக்களுக்கு இரவு உணவு சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாநகராட்சி 15 வது மண்டலக் குழு தலைவர் மதியழகன் உணவு வழங்கி வருகின்றனர். சென்னை ஈசிஆர் சின்ன நீலாங்கரை மற்றும் பெரிய நீலாங்கரை பகுதியில் உள்ள மீனவ மக்கள் சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் உணவை வீட்டில் உள்ள பாத்திரங்களை கொண்டு வந்து வீட்டில் எத்தனை பேர் வசிக்கிறார்களோ அவர்களுக்கு தேவையான உணவை வாங்கி சென்றனர்.


தமிழக வெற்றி கழகம் உதவி


பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தமிழக வெற்றி கழகத்தினர் உணவு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவில் இருந்து புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காட்டுப்பாக்கத்தில் பல குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக இந்திராணி நகர், ஸ்டாலின் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில்மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கு கூட இன்னல்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட த.வெ.க நிர்வாகி விஜயன் சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது. 


மேலும் படிக்க | Fengal Cyclone: பேய் மழை கொட்டப்போகுது!! ‘இதை’ எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க மக்களே..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ