கல்லூரி வகுப்புகளுக்கான அட்டவணை குறித்த முழு விவரங்கள்!
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி நேரடி வகுப்புகளுக்கான கால அட்டவணை தமிழக அரசு வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா (Corona) பெருந்தொற்று காரணமாக பள்ளி (School), கல்லூரிகள் (Colleges) மூடப்பட்டு இருந்தன. மாணவ, மாணவியர்களுக்கும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று சற்று ஓரளவு குறைய தொடங்கியுள்ளதால் மாணவர்களும் (Students)வகுப்புகளுக்கு வந்து பாடங்களை கற்க வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி நேரடி வகுப்புகளுக்கான அட்டவணை தற்போது அரசு வெளியிடப்பட்டு உள்ளது அந்த கால அட்டவணை (Time table) பின்வருமாறு:
அதில் மூன்று வருட பட்டப் படிப்பு வகுப்புகள், பட்டமேற்படிப்பு வகுப்புகள், அதாவது பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.எல், பி.சி.ஏ, பி.பி.ஏ ,எம்.சி.ஏ போன்ற படிப்புகளுக்கு இரண்டாம் வருட வகுப்புகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும். இதே படிப்புகளுக்கான மூன்றாம் வருட வகுப்புகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடக்கும்.
இரண்டாம் வருட எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம்,எம்.பி.ஏ , எம்.இ , எம்.எஸ்.சி,எம்.எல்,எம்.டெக், போன்ற படிப்புகளுக்கான வகுப்புகள் அனைத்து நாட்களிலும் நடைபெற உள்ளன.
நான்கு வருட பட்டப் படிப்புகளான பி.இ, பி.டெக்,பி. எஸ்.சி, (விவசாயம்) போன்ற படிப்புகளுக்கு இரண்டாம் வருட வகுப்புகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் மூன்றாம் வருட வகுப்புகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நான்காம் ஆண்டு வகுப்புகள் அனைத்து நாட்களிலும் நடைபெற உள்ளன.
ஐந்து வருட பட்டப் படிப்புகளான பி.ஆர்க்,பிவி.எஸ்.சி, மற்றும் சட்டப் படிப்புகள் இரண்டு மற்றும் நான்காம் வருட வகுப்புகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் மூன்று மற்றும் ஐந்தாம் வருட வகுப்புகள் செவ்வாய் ,வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நடைபெற உள்ளன. என்று அந்த அட்டவணையில் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR