மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் மீண்டும் தீ
நேற்றிரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
கடந்த 2ம் தேதி இரவு 11:30 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த 30-ம் மேற்பட்ட கடைகள் தீயினால் பாதிக்கப்பட்டது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபம் இடிந்து விழுந்தது. எனவே மண்டபத்தை சீரமைக்கவும், தீ விபத்து குறித்த காரணத்தை கண்டறியவும் 12 நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தது தமிழக அரசு.
இந்நிலையில், நேற்றிரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது எனவும், தீ பரவாமல் உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள் இருக்கும் 115 கடைகளை இன்று 12 மணிக்குள் அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.