2 நாள் போராட்டத்திற்கு பிறகு 60க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்ட தீயணைப்புத்துறையினர்!
கொள்ளிடம் ஆற்று மணல் திட்டு பகுதியில் சிக்கிய 60க்கும் மேற்பட்ட மாடுகள் 2 நாள் போராட்டத்திற்கு மாடுகளை மீட்ட தீயணைப்புத்துறையினர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலிகருப்பூர் கிராமத்தில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் தங்களது கால்நடைகளை அருகிலுள்ள கொள்ளிட ஆற்றுப் பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்பி பின்னர் வீட்டுக்கு ஓட்டி வருவது என வழக்கமாக பணியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்ற 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் கொள்ளிட ஆற்றின் மணல்திட்டு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. இதனிடையே தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கொள்ளிட ஆற்றின் ஒரு லட்சம் கன அடி நீர் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் திரும்பி கரைப் பகுதிக்கு வராமல் அங்கேயே தங்கிவிட்டது.
நாளுக்கு நாள் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதாலும், மேலும் இன்னும் சில தினங்களில் அதிக அளவில் கனமழை பெய்யும் என்று வானிலை அறிக்கை தகவல் தெரிவித்ததால், இதில் அச்சமடைந்த விவசாயிகள் கரை பகுதியில் சிக்கித் தவிக்கும் மாடுகளை மீட்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் நேற்று மாலை 5 மணி அளவில் கரைப் பகுதிக்கு சென்று நீர் மோட்டார் பொருந்திய படகு மூலம் மாடுகள் இருக்கும் மணல் திட்டு பகுதிக்கு விவசாயிகளை அழைத்து சென்றனர்.
பின்னர் அங்கு சென்ற தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் அங்குள்ள மாடுகளை சத்தம்போட்டு ஆற்றில் இறங்கி கரைப்பகுதிக்கு ஓட்டிச்செல்ல முயற்சித்தனர். அப்போது பாதி தூரம் வந்த மாடுகள் அனைத்தும் திரும்பி மேய்ச்சல் பகுதி உள்ள கரைப் பகுதிக்கு சென்றது.
இந்த போராட்டம் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. நீண்டநேரம் தீயணைப்புத்துறையினர் போராடியும் மாடுகள் கரை பகுதிக்கு வரவில்லை. மேலும் இரவு நேரமாகிவிட்டதால் பின்னர் அனைவரும் மீண்டும் கரைப் பகுதிக்கு படகு மூலம் வந்தடைந்தனர்.
எப்படியும் தங்களது மாடுகள் கரைப் பகுதிக்கு வந்து சேரும் என்று நினைத்திருந்த விவசாயிகளுக்கு சற்று ஏமாற்றத்தை தந்தது. இருப்பினும் பகல் பொழுதில் எப்படியும் மாடுகளை விவசாயிகளிடம் மீட்டு கொடுப்போம் என தீயணைப்புத் துறையினர் விவசாயிகளிடம் நம்பிக்கை தெரிவித்தனர். இதன்படி இன்று சுமார் 11 மணிக்குள்ளாக அனைத்து பசுமாடுகளையும் மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டு வந்தனர் தீயணைப்புத் துறையினர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR