தென்கிழக்கு வங்கக்கடளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை....
இந்தியப்பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது......
இந்தியப்பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது......
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வரையிலான வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்தியப்பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் 50 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசக்கூடும் என்றும் நீலகிரி மற்றும் வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு உறைபனி தொடரும் என்றும் 25ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.