தென்மேற்கு பருவமழை! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!
தென் மேற்கு பருவமழை ஒடிஷா, மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, சிக்கிம் ஆகிய பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது!
அதன்படி, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..!
தென் மேற்கு பருவமழையானது ஒடிஷா, மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, சிக்கிம் ஆகிய பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.
மேலும்,அருணாச்சல பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், தெற்கு கொங்கன் மற்றும் கர்நாடக, கேரள கடல் பகுதிகளில் கடும் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் அதன் தாக்கம் காணப்படுவதால், நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடல்சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லாததால் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.