தொடரும் மழை காரணமாக கர்நாடக அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகிரித்துள்ளதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.77 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் அணைக்கு வரும் நீரின் அளவும் 2.10 லட்சம் கனஅடியா உயர வாய்ப்புள்ளது.


இதன்காரணமாக மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளில் இருந்து வினாடிக்கு 2.8 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், கரியோரம் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தின் 11 மாவட்டம், புதுவையின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.