சேலம்: சனிக்கிழமை அதிகாலை முதல் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட நிர்வாகம் மேட்டூர் அணையின் நீர் பரவும் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மேற்கு பருவமழையால் கர்நாடக மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதும் பாதுகாப்புக் காரணத்துக்காக காவிரியில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்த அதிகரிக்கப்பட்டு வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் தமிழகத்திற்கு வரும் அதிகப்படியான காவிரி நீரால் ஒகேனக்கல் அருவிகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.


சனிக்கிழமை அதிகாலை முதல் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட நிர்வாகம் மேட்டூர் அணையின் நீர் பரவும் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேட்டூர் அணையின் அருகிலுள்ள தாழ்வான பகுதிகளான மூலகாடு, பலவாடி, கோட்டையூர், காவேபுரம், கோவிந்தபாடி, கருங்கலூர், சேட்டியூர், சின்ன மேட்டூர் மற்றும் கூனந்தியூர் போன்ற ஊர்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கால்நடைகலையும் பாதுகாப்பான இடத்திற்கு கூட்டிச்செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளார்.


மேட்டூர் அணையின் நீர் பரவும் பகுதிகளில் மீன் பிடிப்பதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. செல்பி எடுப்பதற்காக நீச்சல் மற்றும் நீரில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 


காவல்துறை அதிகாரிகள், வருவாய், தீயணைப்பு மற்றும் மீட்பு மற்றும் மீன்வளத்துறை மற்றும் பேரழிவு முகாமைத்துவத்தில் பயிற்சியளிக்கப்பட்ட நபர்கள் உட்பட பல்வேறு குழுக்கள் முன்னெச்சரிக்கையாக தாயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். ஒருவேளை வெள்ளப்பெருக்கம் ஏற்ப்பட்டால் தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்க காத்திருப்புடன் அவர்கள் வைக்கப்பட்டு உள்ளனர்.