சிறுத்தை உயிரிந்த விவகாரம்; தேனியின் தோனிக்கு வனத்துறை சம்மன்!
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அதிமுக எம்பி ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமாக இறந்து கிடந்தது.
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அதிமுக எம்பி ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமாக இறந்து கிடந்தது. சிறுத்தை இறந்தது தொடர்பாக எம்பி ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர் இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பாக ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தோட்ட உரிமையாளர் எம் பி ரவீந்திரநாத் குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கைது செய்யப்பட்ட ஆடு மேய்க்கும் தொழிலாளி அலெக்ஸ் பாண்டியன் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
மேலும் படிக்க | கடும் இருமல்... பேச திணறல் - ஜெயலலிதாவின் உறையவைக்கும் இறுதி நிமிடங்கள்
தோட்ட உரிமையாளர்களான ரவீந்திரநாத் எம்.பி. உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் ரவீந்திரநாத் எம்.பி மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகருக்கு கடந்த வாரம் தேனி மாவட்ட வன அலுவலர் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, ரவீந்திரநாத் எம்.பிக்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இரண்டு வாரத்திற்குள் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளதாக தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தேடுதல் பணிகள் மும்முரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ