தனியாக இரவில் பயணிக்கும் பெண்களை அழைத்து செல்ல ரோந்து தமிழகத்தில் புதிதாக ரோந்து வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜனின் மனைவி வரவேற்பு அளித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோட்டரி சங்க விழா..


சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் அச்சங்கத்தின் முன்னாள் கவர்னர் மருத்துவர் ரேகா செட்டியை நினைவு கூறும் வகையில் விருதுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர்கள் புவனா ராஜேந்திரன், மற்றும் வித்யா ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


மேலும் படிக்க | திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி - சேலத்தில் பரபரப்பு பேச்சு!


அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் மனைவிக்கு விருது..


ரோட்டரி சங்கத்தின் தலைவர் நவநீத் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் Mafoi நிர்வாகத்தின் இயக்குனரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான மாஃபா. பாண்டியராஜனின் மனைவி லதா பாண்டியராஜனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் மனைவி லதா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்போது அவர், பெண்கள் தற்போதுள்ள காலகட்டத்தில் பல சாதனை படைத்து வருவதாகவும்  பேருந்து இயக்கக் கூடிய அளவிற்கு பெண்கள் உயர்ந்து உள்ளதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளமதகவும் தெரிவித்தார். இருந்தாலும் கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் எந்த ஒரு அச்சமும் இன்றி வெளியே வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 


தொடர்ந்து பேசிய அவர், “பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்தால் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் சென்றுவிடும் எனவே தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கும் நமது நாட்டில் பெண்கள் முக்கியத்துவமாக இருக்க வேண்டும்” என கூறினார். 


வாகனங்களுக்கு வரவேற்பு..


தமிழக காவல் துறையினர் இரண்டு தினங்களுக்கு முன்னர் தனியாக பயணம் செய்ய பயப்படும் பெண்களுக்கு உதவி எண்கள் மற்றும் அவர்களுக்கான ரோந்து வாகனங்களையும் அறிமுகப்படுத்தினர். இதுகுறித்து லதா பாண்டியராஜன் பேசினார். அப்போது, “தமிழ்நாடு காவல்துறை இரண்டு தினங்களுக்கு முன்பு தனியாக இரவு பயணிக்கும் பெண்களை அழைத்து செல்ல ரோந்து வாகனத்தின் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேரத்தில் பல்வேறு துறைகளில் பெண்கள் பணியாற்றுகின்றனர். 
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பெண்கள் தனியாக பயணிக்கும்போது பாதுகாப்பு குறைவு என நினைத்து காவல்துறை இந்த உதவி எண்கள் அறிவித்திருப்பது ஒரு நல்ல விஷயம்” என்று அந்த திட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளார்.


மேலும் படிக்க | பேருந்து ஓட்டுநர் வேலையை இழந்த ஷர்மிளாவிற்கு கார் வாங்கிக்கொடுத்த கமல்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ