இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல்நலக் குறைவால் சென்னை அடையாற்றில் உள்ள இல்லத்தில் காலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டைச் சேர்ந்தவர் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் (வயது 87) .  தமிழகத்தின் தேர்தல் முகமாக இருந்த இவர் 1990 முதல் 1996 வரை இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்தார். மேலும் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறைஇயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார்.



 தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பல. இவரது நடவடிக்கைகள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானபோதிலும் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர்திருத்தங்களை செய்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு கூறுகையில்., சேஷன் தேர்தல் ஆணையராக இருந்த காலக்கட்டத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வேட்பாளர் தங்களது தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்தவரும் இவர்தான்.



டி.என்.சேஷன் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப்பொறுப்புகை வகித்து ஓய்வு பெற்றவர். 




இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்.