சென்னை: வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திரும்ப பெற்றுள்ளார். தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2015 - 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும்,   2017 - 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


இந்த நோட்டீசின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


மேலும் படிக்க | Income Tax Rebate: சூப்பர் செய்தி!! இனி இவர்கள் வரிவிலக்கின் பலனைப் பெறுவார்கள்!


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்தததோடு,  வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டது.


இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வருமான வரித்துறையில்  மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டுமென பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல்குத்தூஸ், மனுவை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.


தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.


முன்னதாக, பணமதிப்பிழப்பு காலத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் கணக்கில் வராத பல கோடி ரூபாய் சிக்கியது. இது தொடர்பாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு காண்டிராக்டர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர், ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


இந்த சோதனையில்  147 கோடி ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும்,  சுமார் 34 கோடி ரூபாய்க்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும்,  178 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஜப்பானிலும் வேர்விட்டதா ஊழலின் கிளைகள்? அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் புகார்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ