அதிமுக செயற்குழுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். சில சிறப்புத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு, அதிமுகவின் அடிப்படை விதிகளில் சில திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. அதன்படி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களே இனிமேல் தேர்ந்தெடுப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஜெயலலிதா நினைவு இல்ல விவகாரம் - அதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு


இதனையடுத்து, அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்தது. அதிமுகவின் உட்கட்சி தேர்தலுக்கு தேர்தல் ஆணையாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சேலத்தில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், அதிமுகவில் இரட்டை தலைமை இருப்பது சிறந்தது எனத் தெரிவித்தார். சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை என கூறிய அவர், அதிமுக உட்கட்சி தேரதல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறுவதாக யார் கூறியது? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அந்த தேதியில் தேர்தல் இல்லை என்றும் உறுதியாக தெரிவித்தார். 


ALSO READ | நாடாளுமன்றத்தில் திமுக எழுப்பவுள்ள 5 பிரச்சனைகள் - டி.ஆர்.பாலு தகவல்


அதிமுக தலைமை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அக்கட்சியின் உட்கட்சி தேர்தலுக்கு தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையன் செய்தியாளர்கள் சந்திப்பில் இப்படியொரு கேள்வி எழுப்பியிருப்பது அதிமுக தலைமை மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR