மீண்டும் அதிமுக-வில் இணைந்தார் முன்னாள் MP கே.சி பழனிசாமி!
அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் MP கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுக-வில் இணைந்தார்!
அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் MP கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுக-வில் இணைந்தார்!
அதிமுக கட்சியின் மூத்த உறுப்பினரான கே.சி.பழனிசாமி அதிமுக-விலிருந்து ஓபிஎஸ் பிரிந்து தனி அணியாக இயங்கியபோது அவருக்கு பெரிதும் உறுதுணையாக அந்த அணியில் இருந்தவர். அதன் செய்தித் தொடர்பாளராக இருந்தவர்.
பின்னர் அணிகள் இணைந்த பின்னர் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் செய்தித் தொடர்பாளராக தொடர்ந்தார். அதிமுக-வின் நிலையை ஊடகங்களில் சிறப்பாக பேசக்கூடியவர்.
டிடிவி அணி பக்கம் ஜெயா டிவி இருப்பதால், அதிமுக சார்பில் அம்மா டிவி ஆரம்பிக்க வேண்டும் என முயற்சி எடுத்தபோது அதற்கு பொறுப்பு கே.சி.பழனிசாமிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு கைமாற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கே.சி.பழனிசாமி ''ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய கேள்விக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுக-வும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும்'' என்கிற தொனியில் பதிலளித்திருந்தார்.
கீழ் மட்டத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் மத்திய அரசுக்கு எதிராக கட்சியின் மேலிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து முடிவெடுக்கும் என தெரிவித்திருந்த நிலையில் கே.சி.பழனிசாமியின் கருத்து அதிமுகவை சங்கடத்துக்குள்ளாக்கியது.
இதனையடுத்து கட்சியின் கொள்கைகள், குறிக்கோளுக்கும் முரண்பாடாக செயல்பட்டதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.
இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் நிலையில் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.