சேலம் மாவட்டம்  அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். 1983ல் ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று, வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணி புரிந்தவர்.  சுற்றுச்சூழல் இயக்குனராக பணிபுரிந்து, 2018ல் ஓய்வும் பெற்றவர். கடந்த அதிமுக ஆட்சியில் 2019ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலம் நியமிக்கப்பட்டார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ சம்பளம் பிடித்தம் செய்யப்படும் அறிவிப்பு வாபஸ் -மின் வாரியம் பல்டி


கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணம் ஒன்றில் சிபாரிசு காரணமாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆட்கள் தேர்வு மற்றும் டெண்டர் விவகாரம் குறித்த பதிவுகள் கிடைத்தது. இதனையடுத்து வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து சென்னை வேளச்சேரியில் உள்ள வெங்கடாசலத்தின் வீடு, சேலம் ஆத்தூர் அம்மம்பாளையத்தில் உள்ள பூர்வீக வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைய நடத்தியதில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம், 13.50 லட்சம் ரூபாய் ரொக்கம் சிக்கியதாகவும் கூறப்பட்டது.



மேலும், வெங்கடாசலத்தின் வீட்டில், 10 கிலோ சந்தன மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தன மரத்துண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்ததை அடுத்து அவர்மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டடு. இவர் வனத்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி இருந்ததால் சட்ட விரோதமாக சந்தன மர கடத்தலில் ஈடுபட்டாரா அந்த சந்தன மர பொருட்கள் மற்றும் சந்தன மரத்துண்டுகள் எப்படி கிடைத்தது என்பது குறித்த விசாரணையும் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல, சேலத்தில் வெங்கடாசலம் வாங்கிய நிலம்  எப்படி வாங்கினார் என்றும் விசாரிக்க போவதாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.


இந்நிலையில் இன்று வேளச்சேரியில் உள்ள தன்னுடைய வீட்டில், வெங்கடாசலம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வெங்கடாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டு விடுகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வரும் நிலையில் வெங்கடாசலத்தின் தற்கொலை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


ALSO READ அதிமுகவில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்த சசிகலா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR