சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை பனிமூட்டம் நிலவுகிறது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சென்றனர்.


 



 


டெல்லி (Delhi) உட்பட வட இந்தியா (North India) முழுவதும் குளிர் (Cold) தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  டெல்லி மட்டுமல்ல, அதனை சுற்றியுள்ள பகுதிகளான நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய மாவட்டங்களில் கடும் குளிர் தொடர்கிறது. இதனால் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


இந்நினையில் தற்போது வட மாநிலங்களில் தொடரும் பனிமூட்டத்தை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. மேலும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் மஸ்கட், ஆஸ்திரேலியா, டெல்லியில் இருந்து சென்னை வந்த 4 விமானங்கள் ஐதராபாத், திருவனந்தபுரத்துக்கு திருப்பி விடப்பட்டன. 



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.