பணம் பத்து செய்யும், போதை நூறு செய்யும் என்பார்கள். அதுபோல, குடிபோதையில் நிகழாத சம்பவங்களே இருக்க முடியாது. நண்பர்கள் குடிக்க அழைத்ததற்காக அம்போவென லாரியை விட்டுச்சென்ற சம்பவம் கிருஷ்ணகிரி அருகே நடைபெற்றுள்ளது. 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த தண்ணீர்பந்தல் வனப்பகுதியில் பால் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. வனப்பகுதியை ஓட்டிய இடம் என்பதால் அந்தப் பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் லாரி மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்ததால் வனத்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'குவாட்டர் விலை ஏறிப்போச்சி' - கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த மதுப்பிரியர்.!


அப்போது, நின்றுகொண்டிருந்த லாரியின் உள்ளே பார்த்த போது, டிரைவர் இல்லாததால் வனத்துறையினர் கலவரம் அடைந்தனர். அங்குமிங்கும் தேடிப்பார்த்தும், டிரைவர் கிடைக்காததால் அதிகாரிகள் பதற்றமாகினர். வனப்பகுதியில் ஓட்டியை லாரி நின்றிருப்பதால், யாரேனும் டிரைவரை அடித்துவிட்டார்களா அல்லது கடத்திக்கொண்டு போய் ஏதேனும் கொலை செய்துவிட்டனரா என வனத்துறையினர் விசாரணையிலும் இறங்கினர். உடனடியாக லாரியை மீட்டு, காவல்நிலையத்துக்கு எடுத்துச்சென்றனர். லாரியை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் டிரைவரின் வீடு எங்கே என தெரியவந்தது. ஊத்தங்கரை அருகே செங்கன்கொட்டாவூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் (32) என்பவர்தான் அந்த லாரியின் டிரைவர் என விசாரணையில் தெரியவந்தது. மது மறுநாள் காலை டிரைவர் அன்பழகனின் வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர், பால் லாரி விவகாரம் குறித்துப் பேசினர். அப்போதுதான் டிரைவருக்கே பால் லாரியை வனப்பகுதியையொட்டி நிறுத்தி வந்தது ஞாபகதுக்கு வந்தது. நடந்தவற்றைச் சொல்லுமாறு அன்பழகனிடம் அதிகாரிகள் வற்புறுத்தினர். இதையடுத்து டிரைவர் அன்பழகன் சொன்ன ப்ளேஷ்பேக்கில்தான் உண்மை வெளியானது. 


மேலும் படிக்க | சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் டாஸ்மாக் - போலீஸார் மீது பொதுமக்கள் அதிருப்தி!


வழக்கம்போல், வனத்துறையை ஒட்டியுள்ள இடத்தில் பால் லாரியை டிரைவர் அன்பழகன் நிறுத்தியுள்ளார். அப்போது, அவருக்கு போன் கால் வந்துள்ளது. அதில், குடிக்க வருமாறு நண்பர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அந்த இடத்தில் யாருமில்லாததால் பால் லாரியை அங்கேயே விட்டுவிட்டு நண்பர்களின் அழைப்புக்கு மரியாதைக் கொடுத்து அன்பழகன் கிளம்பியுள்ளார். போன இடத்தில் போதை தலைக்கேறி அன்பழகன் மட்டையாகியுள்ளார். லாரியை நிறுத்திவிட்டு வந்ததும் அவருக்கு ஞாபகம் இல்லை. இதையடுத்து, அன்பழகனை காவல்நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார், அறிவுரைக் கூறி லாரியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR