#GajaCycloneUpdate: தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்ய தயார் -ராஜ்நாத் சிங்
கஜா புயல் குறித்து செய்திகள் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளுங்கள்..
13:38 16-11-2018
தமிழ்நாட்டில் கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது/
13:10 16-11-2018
கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வரிடம் கேட்டரிந்தார். மேலும் தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்று உறுதி அளித்தார்.
12:01 16-11-2018
இன்று பிற்பகல் முதல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லலாம். வரும் 18-ம் தேதிக்கு பின்னர் கடலுக்கு செல்ல வேண்டாம். அதுக்குறித்து முழுவிவரம் அறிவிக்ப்பபடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11:37 16-11-2018
கஜா புயலால் பாதிக்கப்பட்டவோருக்கு அரசுடன் சேர்ந்து திமுக தொண்டர்கள் ராணுவ வீரர்கள் போல நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு துணை நிற்க வேண்டும். நேரில் சென்று மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.
11:28 16-11-2018
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்), முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதற்க்கு அடுத்த படியாக பேராவூரணி (தஞ்சாவூர் மாவட்டம்), பட்டகோட்டை (தஞ்சாவூர் மாவட்டம்), நெய்வேலி
(கடலூர் மாவட்டம்) 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
11:22 16-11-2018
கஜா புயல் கரையை கடந்தது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
10:20 16-11-2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மின்துறை, சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
09:23 16-11-2018
கஜா புயல் காரணமாக வீசிய காற்றால் நாகை ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் ரயிகள் சிறிது நேரம் நிறுத்தம்.
07:29 16-11-2018
கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பத்து மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
நேற்று நாகை மற்றும் சென்னையில் இருந்து 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயலானது, நேற்று இரவில் நாகை அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று காலை 8.30 மணிக்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் கஜா புயலானது, மேற்கு-தென்மேற்கு திசையில் மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, அதிகாலை 5.30 மணிக்கு நாகையில் இருந்து கிழக்கு-வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, முற்பகல் 11.30 மணிவாக்கில் தீவிர புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அது மேலும் நகர்ந்து மீண்டும் மாலை 5.30 மணிவாக்கில் வலுக்குறைந்து புயலாக மாறும் எனவும், பாம்பன்-கடலூர் இடையே, நாகை அருகே இன்று மாலை அல்லது இரவில் புயலாக கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், காற்றின் வேகம் 100 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கரையைக் கடந்த பிறகு, 17ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நிலை கொள்ளும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கஜா புயலால் நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிககன மழை பெய்யும் என்றும், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில், ஆங்காங்கே, 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவில் அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று பெரும்பாலான இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் குறிப்பாக உள்தமிழக பகுதிகளில் மிக கனமழையும் பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.