விநாயகர் என்றாலே வேண்டிய வரங்களை உடனே கொடுப்பவர். விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் முக்கியமான திருவிழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படும் நிலையில், இன்று நாடு முழுவது விநாயர்கள் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டமும் ஆலயங்களில் குறைவாகவே காணப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற உச்சிப்பிள்ளையார் கோயிலில், இன்று விநாயாகர் சதுர்த்தி திருநாளை ஒட்டி, சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது. 


மலைக்கோட்டை கோயிலில் உள்ள தாயுமானவர் சன்னதியிலிருந்து தொட்டில் கட்டி, அதில் 30 கிலோ கொழுக்கட்டை எடுத்து செல்லப்பட்டது. அப்போது மேள தாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் மற்றும் ஓதுவார்கள்படை சூழ, உச்சிப்பிள்ளையார் ஆலயத்திற்கு கொழுக்கட்டை எடுத்து செல்லப்பட்டது. 


ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி திருநாளில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டையும் படைக்கப்படும்.


ALSO READ | Ganesh Chaturthi: விநாயகர் சதுர்த்தி பற்றிய சுவாரஷ்யமான சில தகவல்கள்


கொரோனா பரவல் காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், இந்த வருடம் 30 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது. 


விக்னங்களை தீர்க்கும் விநாயகரை இன்றைய தினம் வணங்குகையில், நாம் புதிய விநாயகர் (Vinayagar Chathurthi) திருவுருவத்தை மண்ணிலோ மஞ்சளிலோ அல்லது பிற மங்கலப் பொருள்களிலோ செய்து வழிபாடு செய்தால் மிகந்த பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



 


ALSO READ: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை - முதலமைச்சர் விளக்கம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR