தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு காவல்துறையும் போதைபொருள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், சென்னையை அடுத்த தாம்பரத்தில் சட்ட விரோதமாக   குட்கா விற்பனை செய்து வந்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Biryani Death: நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்டவர் உயிரிழப்பு! போலீசார் விசாரணை


தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பெட்டி கடைகளுக்கு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விநியோகம் செய்யவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து கண்காணிப்பில் இறங்கிய காவல்துறை, பார்த்திபன் என்பவரை தாம்பரம் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் பொறி வைத்து பிடித்தனர்.அவர் கொடுத்த தகவலின் பேரில் மொத்த விற்பனையாளரான மங்கல்ராம் (29) மற்றும் சிவபெருமாள் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 


அவர்கள் பயன்படுத்திய காரில் இருந்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள், கார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து படப்பை அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 1300 கிலோ குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு குட்கா விநியோகத்துக்காக வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் . மேலும், போலீசார் விசாரணையில் கைது செய்ய பட்ட மூன்று பேரும் பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வாங்கி தாம்பரத்தில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க | கனிமொழி வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த மர்ம நபர்... போலீசார் தீவிர விசாரணை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ