எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் இன்று துங்கியது!
டெண்டர் விதிமுறையை கண்டித்து எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.இதனால் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள எண்ணெய் நிறுவன சேமிப்பு கிடங்கிலிருந்து சிலிண்டர்களுக்கு எரிவாயு நிரப்பும் ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் கோராமல் பழைய ஒப்பந்தத்தையே எண்ணெய் நிறுவனங்கள் 6 மாத காலம் நீட்டித்தன.
இந்நிலையில், தற்போது எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில், வாடகை ஒப்பந்தப்புள்ளி மண்டல அளவில் இல்லாமல் மாநில அளவில் தனித்தனியாக நடத்தப்படும் என்றும் அதில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு மாநில அளவில் டெண்டர் நடத்தப்பட்டால், டேங்கர் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால், இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி டேங்கர் லார் உரிமையாளர்கள் இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டத்தில் 4,500 டேங்கர் லாரிகள் பங்கேற்றுள்ள நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, கேரளா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு கியாஸ் ஏற்றி செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.