2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வழக்கம்போல், ஆளுநர் உரையுடன் இந்த கூட்டம் தொடங்கிய நிலையில், ஆளுநர் தமிழில் உரையை தொடங்கினார். பின்னர் தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்ட உரையை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வாசித்தார். பின்னர், தமிழிலேயே தனது உரையை நிறைவு செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, அதன் தமிழாகத்தை  சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பேரவையில் எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்ட உரையில் சில வார்த்தைகளை தவிர்த்தும், சில வார்த்தைகளை சேர்த்தும் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, அவர் பேசிய உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் படிக்க | TN Assembly: ஆளுநர் வெளிநடப்பு செய்தது ஏன்? பரபரப்பு பின்னணி



இதுகுறித்து, சபாநாயகர் அப்பாவு கூறுகையில்,"ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை வேதனையோடு தெரிவித்து கொள்கிறேன். ஆளுநர் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும். ஆளுநர் பொது மேடையில் பேசுவதை  போல் பேசுவது ஏற்புடையது அல்ல" என்றார். 


இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சியான விசிக, ஆளுநரை மாளிகை முற்றுகையிட்டு போராடம்  என அறிவித்துள்ளது. தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. சமூக வலைதள பயனர்களும் தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்க இணையத்தில் தொடர்ந்து பயன்படுத்துவது வழக்கம்.



முன்னதாக, தமிழ்நாடை தமிழகம் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும் என ஆளுநர் ரவி கூறியதை அடுத்து, '#தமிழ்நாடு' டிராண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | TN Governor Skips: ஆளுநர் தவிர்த்த முக்கிய வார்த்தைகள் என்னென்ன? - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ