நான்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கான தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


முன்னாக கடந்த 18-ஆம் தேதி நடைப்பெற்ற 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மீதம் உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்தலில் நேருக்குநேர் மோதும் அதிமுக - திமுக முறையே இரட்டை இலை மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.


இந்நிலையில், மேற்கண்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.


முன்னதாக 4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டி சின்னம் அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். 


மக்களவை தேர்தலுக்கு முன்னாதக தினகரன் தலைமையிலான அமமுக-விற்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 


ஆனால் அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என கூறி, அமமுக-விற்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


இதன்பின்னர் டிடிவி தினகரனுக்கு தேர்தல்களில் பொதுச்சின்னம் தர பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு அமமுக-விற்கு 'பரிசுப்பெட்டகம்' சின்னம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுக-வை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாகவே போட்டியிட்டனர்.


சமீபத்தில் நடந்த அமமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின்னர் அமமுக  பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பதவியேற்றார்.  இந்நிலையில், 4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டகம் சின்னம் அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.