திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் பூமிநாதன். இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நவல்பட்டு ரோட்டில் மூன்று டூவீலர்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் அவர்கள் டூவீலரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்கள். அப்போது அவர்கள் ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொண்ட காவலர் பூமிநாதன் அவர்களை விரட்டிப் பிடிக்க சென்றார்.


ALSO READ | காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது


களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகே சென்றபோது ஒரு டூவீலரை எஸ்ஐ தடுத்து நிறுத்தினார். அந்த ஆடு திருடும் கும்பல் மறைத்து வைத்து இருந்த அரிவாளை வைத்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் இதுகுறித்து தகவலறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிப் படுகொலை செய்தவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து படுகொலை குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ALSO READ |  பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR