சென்னை: ஏர் இந்தியா விமானத்தில் (Air India Flight) இருந்து 6 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது, அந்த தங்கத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமானத்தில் மறைத்து தங்கக் கடத்தல் செய்யப்படுவதாக கிடைத்த உளவுத்துறைத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


துபாயில் இருந்து வந்த AI-906 என்ற ஏர் இந்தியா விமானம் தொடர்பாக இந்த தகவல்கள் வந்தன. கிடைத்த துப்பின் அடிப்படையில் விமானத் துறை சுங்க அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


Also Read | இருந்த இடத்திலிருந்தே கடவுளை வணங்குக, கும்பமேளாவிற்கு வரவேண்டாம்...


வெள்ளை நாடாக்களால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இரண்டு கனமான பாக்கெட்டுகள் விமான இருக்கையின் குஷனின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்த்னர். 


அதை பிரித்து பார்த்தபோது, தலா ஒரு கிலோ எடையுள்ள ஆறு தங்கக் கட்டிகள் இருந்தன. அதில் “SAM 1 KILO FINE GOLD 999.9” என்ற வெளிநாட்டு முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. 


மொத்தம் 6 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளின் மதிப்பு 2.90 கோடி ரூபாய் மதிப்பிலானவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 


ALSO READ: 7th Pay Commission: நிலுவையில் உள்ள DA தொகை பற்றிய முக்கிய செய்தி, இப்போது கிடைக்கும் முழு தொகை


இந்த தங்கக் கட்டிகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை. சுங்க சட்டத்தின் கீழ் உரிமை கோரப்படாத இந்த தங்கக் கட்டிகளை சுங்கத்துறை கைப்பற்றியது.


தொடர்ந்து சில நாட்களாக தமிழகத்தில் கடல் மார்க்கமாகவும், விமானம் மூலமாகவும் தங்கம் கடத்தப்படுவதன் காரணம் என்ன? தங்கத்தின் விலை அதிகரிப்பு, பொருளாதார சிக்கல்கள், கொரோனா தொற்றுநோய் பரவல் என அடிப்படையாக பல காரணங்கள் இருக்கின்றன.


தங்கக் கடத்தலுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியலும், விஷயங்களும் இருக்கின்றன.வேறொரு நாட்டில் இந்து தங்கத்தை கடத்தி வருவதற்கான ஒரு காரணமாக நாட்டுக்கு நாடு மாறுபடும் வரி விகிதம் என்பதைச் சொல்லலாம்.


ஆனால், போதை மருந்து, பணப் பரிமாற்றம், லஞ்சம் என பல்வேறு பரிணாமங்களும் தங்கக்கடத்தல்கலின் பின்னணியில் இருக்கின்றன. ஆனால் பயணிகள் தங்கம் கடத்துவது என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது.  


Also Read | பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு, பயன்படுத்திக் கொண்டால் பலன்  


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR