வார முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம்: ரூ.40 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
Gold Rate Today: வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தில் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தில் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் பெரிய அளவில் ஸ்திரமற்ற தன்மை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் காணப்படுகின்றன. பல பெரிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ரஷ்யா உக்ரைன் போரின் துவக்கம் முதலே தங்கத்தின் விலையில் அதிக ஏற்றம் இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள்.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 85 அதிகரித்து ரூ. 5055 ஆக அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒரு சவரண் ஆபரணத் தங்கம் ரூ. 680 அதிகரித்து 40,440 ரூபாயில் விற்பனையில் உள்ளது.
மேலும் படிக்க | நாளை பெட்ரோல் விலை என்ன ஆகுமோ! கலக்கத்தில் மக்கள்
தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.
இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது.
மேலும் படிக்க | Gold Rate: தகதகவென உயரும் தங்கத்தின் விலை, ஏற்றமே தொடரும் என எச்சரிக்கும் நிபுணர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR