சிறப்பு பேருந்து: தமிழ்நாட்டில் இந்த வருடம் பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் வரும் 7 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க இருப்பதால் இந்த வார இறுதி நாட்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கூடுதலான பயணிகள் தமிழகம் எங்கும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2,200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்:
தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் கூடுதலாக சென்னைக்கு 900 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருக்கும் 1,300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


பயணிகள் இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுமட்டுமின்றி மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என மேலாண் இயக்குநர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் செய்தி வெளியீடப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க - அரசு உத்தரவை மீறிய தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை!



ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:
முன்னதாக தமிழ்நாட்டில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்ததை ஒட்டி, ஏப்ரல் 29 தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. ஒரு மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால், ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஒருவேளை வெப்ப அலை நிலை நீடித்தால், பள்ளி திறக்கும் தேதியை மாற்றுவது குறித்து பரிசீலிப்போம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இதனையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக  அனைத்து வகுப்புகளுக்கும் வரும் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



பள்ளி திறக்கும் நாள் அன்றே பாடப்புத்தகம்:
தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டப்படி, பள்ளி திறக்கும் அதே நாளில் புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே செய்தியாளர்கள் சந்திப்பில், பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், பள்ளிப் பைகள் உள்ளிட்ட பிற பொருட்களை தாமதமின்றி வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.


மேலும் படிக்க - முதல் நாள் அன்றே மாணவர்களுக்கு பாடப்புத்தகம் -பள்ளிக்கல்வித் துறை அதிரடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ