அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. தங்கள் ஓய்வூதிய திட்ட முறை மாற்றப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது இது சாத்தியமாகும் என்பதற்கான சங்கேதங்கள் தெரிய வந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு ஊழியர்கள் கோரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிடுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை அரசு மும்முரமாக எடுத்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme)


பழைய ஓய்வூதியத் திட்டத்தில் (OPS), அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அனைத்து வித கொடுப்பனவுகளோடு அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக வழங்கப்படும். அதாவது அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு மாதா மாதம் உறுதியான, நிலையான வருமானம் இருக்கும். எனினும், இந்த திட்டம் 1-4-2003-க்கு பிறகு அரசு பணிகளில் சேர்ந்தவர்களுக்கு கிடைக்காது. 


புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme) 


புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் (NPS), ஓய்வூதியம், சலுகைகள், பங்களிப்பின் அளவு, நுழைவு வயது, சந்தாவின் காலம், சந்தாதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டு முறை, முதலீட்டு வருமானம், ஓய்வூதியத்திற்காக பயன்படுத்தப்படும் மொத்த கார்பஸின் சதவீதம், தேர்ந்தெடுக்கப்பட்ட வருடாந்திர விருப்பம் மற்றும் பிற தொடர்புடைய காரணிகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.


புதிய ஓய்வூதிய திட்ட முறைப்படி அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீத தொகை பிடிக்கப்படுகின்றது. இதற்கு ஈடான ஒரு தொகையை அரசும் செலுத்தும். அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது இது அவர்களுக்கு மொத்தமாக வழங்கப்படுகின்றது. 2004 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. 


ALSO READ: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு


பழைய ஓய்வூதிய திட்டம் vs புதிய ஓய்வூதிய திட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நிலையான மாத மருமானம் கிடைக்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில், மொத்தமான தொகை வழங்கப்படுகின்றது. இப்படி மொத்தமாக பணம் வரும்போது, அதை ஓய்வூதியதாரரின் சொந்தங்கள் பயன்படுத்திக்கொணள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. ஓய்வீதியதாரருக்கு இதற்கான பலன் கிடைக்காமல் போகலாம். 


மொத்தமாக கிடைக்கும் தொகை தீர்ந்துவிட்டால், பின்னர் வயதான காலத்தில் அவர்களது செலவுக்கு வழியில்லாமல் போகலாம். ஓய்வூதியதாரர்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டால், அவர்கள் ஏமாற வாய்ப்புள்ளது. 


அரசு ஊழியர்களின் கோரிக்கை


பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பணி ஓய்வுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருவதுதான் தங்களுக்கு பொருளாதார பாதுகாப்பை அளிக்கும் என அவர்கள் கூறி வருகின்றனர். 


தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை


சமீபத்தில் தமிழகத்தில் (Tamil Nadu) நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பெற்றது. தனது தேர்தல் அறிக்கையில், திமுக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக உறுதி அளித்திருந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஊழியர்களின் கோரிக்கையை ஆராய அரசு புதிய ஓய்வூதிய திட்டம் குறித்த ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 


இதற்கிடையில், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் ஒப்பிடப்படுவதைப் பொறுத்தவரை, இரு திட்டங்களும் இயல்பு, கட்டமைப்பு மற்றும் நன்மை ஆகியவற்றில் வேறுபட்டவை என்று மத்திய அரசு முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவ்விரண்டையும் ஒப்பிட முடியாது என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. OPS என்பது இந்திய அரசாங்கத்தின் வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமாகும். NPS, எந்தவொரு வரையறுக்கப்பட்ட நன்மைகளும் இல்லாத ஒரு பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும்.


ALSO READ: 7th Pay Commission: NPS, OPS ஓய்வூதிய திட்டம் குறித்த மிகப்பெரிய அறிவிப்பை அளித்தது நிதி அமைச்சகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR