TN Budget 2021: பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு: நிதியமைச்சர் PTR
பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியில் ரூ.3 குறைக்கப்படும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
சென்னை: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான 3 ரூ வரி குறைப்பால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ1,160 கோடி இழப்பு ஏற்படும். கடந்த அதிமுக ஆட்சியின் காரணமாக கடும் நிதிச்சுமையில் சிக்கியுள்ள தமிழ்நாடு, தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மக்களின் நலன் கருதி பெட்ரோல் விலையை குறைத்துள்ளது.
முன்னதாகப் பேசிய நிதித்துறை அமைச்சர், 'பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடமே உள்ளது என்று கூறினார்.
கடந்த மாதமே பெட்ரோல், டீசல் மீது உள்ள வரியைப் பற்றி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். பெட்ரோல், டீசல் வரி உயர்வால் ஒன்றிய அரசுக்கு 69% வருவாய் அதிகரித்துள்ளது. பெட்ரோல் மீது ரூ.10 ஆக இருந்த வரியை ஒன்றிய அரசு ரூ.32.90 ஆக உயர்த்தியுள்ளது. ரூ.32.90 வரியில் ரூ.31.50 ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. ரூ.32.90 வரியில் ரூ.1.4 மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்குகிறது. பெட்ரோல், டீசல் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூபாய் 336 கோடி வருவாய் குறைந்துள்ளது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து வருடத்திற்கு பிறகு ஆட்சி அமைத்த திமுக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று காலை 10 மணி முதல் தாக்கல் செய்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR