Tamil Nadu Government job fair |  தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார்துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 27:12.2024 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு. ஐ.டிஐ + டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.  


வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in ) பதிவேற்றம் செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப, அவர்கள்கேட்டுக்கொண்டுள்ளார். 


மேலும் படிக்க| கணவனை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் மத்திய அரசு - எப்படி விண்ணப்பிப்பது?


வேலை வாய்ப்பு முகாம் முழு விவரம்


வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி - 27.12.2024


வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் - கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையம்


கல்வித் தகுதி - 8 ஆம் வகுப்பு முதல் இளங்கலை, முதுகலை, பொறியியல் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் கலந்து கொள்ளலாம் 


கட்டணம் - இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எந்த கட்டணமும் இல்லை, இலவசம்.


மேலும் படிக்க | இனி ஊதியக்குழுவே இல்லை, வருகிறது புதிய சூத்திரம்: அரசு ஊழியர்களுக்கு அதிகமாகும் நன்மைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ