திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே குட்நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, ஆன்மீக பயணமாக திருப்பதி செல்லும் பயணிகளின் வசதிக்காக, இரண்டாம் வகுப்பில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ், மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து புறப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி - டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் கூடுதலாக ஒரு பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. அக்டோபர் 02 முதல் அக்டோபர் 15 வரை கூடுதல் பெட்டிகள் சேர்க்கபடும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 03 முதல் அக்டோபர் 15 வரை கோவையில் இருந்து புறப்படும் ரயில் எண் 22616 கோயம்புத்தூர் - திருப்பதி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், அக்டோபர் 03 முதல் அக்டோபர் 16 வரை திருப்பதியில் இருந்து புறப்படும் ரயில் எண் 22615, திருப்பதி - கோயம்புத்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22617 திருப்பதி - எஸ்எம்விடி பெங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் காட்பாடி, ஜோலார் வழியாக திருப்பதி வழியாக புறப்படும் ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட இருக்கின்றன. அக்டோபர் 04 முதல் அக்டோபர் 15 வரை இந்த பெட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


மேலும் படிக்க | Indian Post Office | தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு இருக்கா? இந்த அறிவிப்பு உங்களுக்கானது!


மேலும், 22618 எஸ்எம்விடி பெங்களூரு - திருப்பதி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக எஸ்எம்விடி பெங்களூரில் இருந்து அக்டோபர் 05 முதல் அக்டோபர் 16, 2024 வரை இயக்கப்படும். எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


ரயில் புறப்படும் / நிறுத்தப்படும் நேரத்தில் மாற்றம்


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் மற்றும் நிறுத்தப்படும் நேரம் மாற்றப்பட்டது குறித்து தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரயில் எண். 16511 SMVT பெங்களூரில் இருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்பட்டு யஸ்வந்த்பூரை இரவு 9.25/9.45 மணிக்கு வந்தடையும். யஸ்வந்த்பூரில் முக்கியமான யார்டு மேம்பாடு பணிகளுக்கு வசதியாக நவம்பர் 1 முதல் 151 நாட்களுக்கு ரயில் எண். 16511/16512 KSR பெங்களூரு - கண்ணூர் - KSR பெங்களூரு எக்ஸ்பிரஸின் நேரம் முழுமையாக மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, ரயில் எண். 16511 SMVT பெங்களூரில் இருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்பட்டு யஸ்வந்த்பூரை இரவு 9.25/9.45 மணிக்கு வந்தடையும்.


மறு மார்க்கத்தில், ரயில் எண். 16512 கண்ணூரில் இருந்து மாலை 5.05 மணிக்குப் புறப்பட்டு, யஸ்வந்த்பூரை 06.10/06.30 மணிக்கு வந்து சேரும். காலை 07.45 மணிக்கு SMVT பெங்களூரு சென்றடையும் என்று தெற்கு ரயில்வே (SR) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்ப பயணிகள் பயணத்தைத் திட்டமிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. SMVT பெங்களூரு நிலையத்தில் உள்ள ரயில் எண். 16511/16512 யை யஷ்வந்த்பூரில் திருப்பிவிட தென்மேற்கு இரயில்வே திருத்தியமைத்துள்ளதால், SMVT பெங்களூரில் முன்னர் அறிவிக்கப்பட்ட நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ