பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
Southern Railway: பயணிகள் சிரமம் இல்லாமல் திரும்பவும் ஏதுவாக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் மற்றும் வெளி ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக சிறப்பு பஸ் மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
தமிழ் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் வார விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கவும், அவர்கள் எந்த சிரமும் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்லவும், அங்கிருந்து திரும்பி வரவும் தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
அதன் அடிப்படையில் தற்போது தெற்கு ரயில்வே பயணிகளுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என்றும், சொந்த ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் தங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு சிரமம் இல்லாமல் திரும்பவும் ஏதுவாக இந்த பேட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!