Gossip News Tamil : முன்னாள் இயக்குநர் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் அடுத்தடுத்து விலிகிக் கொண்டிருக்கிறார்கள். அவரின் போக்கு கட்சியில் இருக்கும் பலருக்கும் பிடிக்கவில்லையாம். முக்கிய நிர்வாகிகளையே அவர் மதிக்காமல் ஒருமையில் திட்டுவதால், இனி அவருடன் இருந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் பெரும்பாலான நிர்வாகிகள். யார் என்ன சொன்னாலும் கேட்கொள்ளாத அந்த முன்னாள் இயக்குநர்  நான் சொல்றத கேட்டு கட்சியில் இருந்தால் இரு, இல்லைன்னா கிளம்பிட்டே இரு என இரண்டு வரி வசனத்தை தவறாமல் எல்லார்கிட்டயும் சொல்கிறாராம். அப்படி அவரு சொல்றதை கேட்டு ஆவேசப்பட்டு கட்சிய விட்டு வெளியில போறவங்க எல்லார் மீதும் பண வசூல் புகார்களை அடுக்கப்படுகிறதாம். எந்த மாவட்டத்தில் யார் விலகினாலும், அடுத்த பொறுப்பில் இருப்பவர்கள் உடனடியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அவரு காசு சுருட்டிட்டார், பணம் வாங்கிட்டார் அதனால் கட்சியே நடவடிக்கை எடுக்கலாம்ங்கிற முடிவுல இருந்தது, அதை தெரிஞ்சுக்கிட்டு அவரே விலகிட்டார் என சொல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து பேசிய கட்சியில் இருந்து விலகிய ஒருவர் குசும்பனிடம் பேசும்போது, " சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கட்சியில இருக்கிறோம். ஒவ்வொரு தேர்தலின்போதும் நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம். சூரிய கட்சி, இலைக்கட்சிகள் என ஊள்ளுர்ல ரெண்டு பக்கமும் இருந்து அழுத்தம் வந்திருக்கு. எல்லாரும் தெரிஞ்ச முகமாக இருந்தாலும் அவங்கள பகைச்சிக்கிட்டு களத்தில வேலை பாத்திருக்கோம். ஆனால், தலைமை எங்களவுக்கு இருந்திருக்கானு பார்த்தா ஒரு விழுக்காடு கூட இல்ல. பொருளாதாரம், குடும்பம், உழைப்புன்னு இந்த கட்சிக்கு நிறைய கொடுத்து இழந்திருக்கோம். ஆனால், எங்களோட எந்த கோரிக்கையும் தலைமை காது கொடுத்து கேட்குறதே இல்லை. எப்படி கட்சிய வளர்த்த முடியும். உள்ளூர் பிரச்சனைகள சந்திக்கிற எங்களுக்கு கட்சி மேலிடத்துல இருந்து ஒரு சப்போர்டும் கிடைக்கிறது இல்ல. எங்க பாக்கெட்டுல இருக்கிற காசு தான் தலைமைக்கும் சேர்ந்து செலவழிக்கிறதா இருக்கு. சரி அப்படி, செலவழிச்சா நல்ல ரிசல்ட் கிடைக்குதான்னு பார்த்தா அதுவும் இல்ல. 


மேலும் படிக்க | சாதி ஆதிக்கம்... பதவி விலகிய பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் - திமுகவை சாடும் அன்புமணி


மக்களோட பிரச்சனைகள், அவங்களோட எண்ண ஓட்டத்தை புரிஞ்சுக்காம திரைப்பட வசனம் பேசுற மாதிரி தலைமை பேசிட்டு இருக்கு. மக்கள் எல்லோரும் படிச்சிருக்காங்க, ஒருமுறை சொல்றபோது கை தட்டுறவங்க, அவரு பேசுனது உண்மையா, சரியா வருமா? என அடுத்தமுறை யோசிக்குறாங்க. அப்படி யோசிக்குறவங்க இரண்டாவது முறை கட்சி பக்கம் வர்றதே இல்லை. இதனால் தான் 10 ஆண்டுகள் ஆகியும் இந்த கட்சி கவுன்சிலர் கூட ஜெயிக்க முடியாத நிலைமையில இருக்கு. ஒரு விஷயத்தை கூட தலைமை சரியா பேசுறது இல்ல. 10 ஆண்டுகளாக கட்சி என்ன செஞ்சிருக்குன்னு திரும்பி பார்த்தா வெறும் வார்த்தை ஜாலங்கள், மக்களோட வாழ்க்கைக்கு ஒத்துவராத திட்டங்களை கற்பனை செஞ்சு பேசுறது தவர வேறு எதுவும் இல்லை. ஒரு ஊர்ல வளர்ந்து வரவங்களையும் எதையாவது சொல்லி தலைமையே காலி பண்ணிருது. அப்படி இருக்கும்போது எப்ப சட்டமன்ற தேர்தல்ல எப்படி ஜெயிருக்கிறது. தலைமையே ஒரு தொகுதியில ஜெயிக்க முடியாத நிலைமையில தான் இந்த கட்சி இருக்கு. 


அப்படி இருக்கும்போது மத்தவங்க எப்படி ஜெயிக்க முடியும். இந்த கட்சியில இருக்கிற பெரும்பாலான உறுப்பினர்கள் இளைஞர்கள் தான். அவங்க எல்லாம் அப்படியே புதுசா வந்திருக்கிற நடிகர் கட்சிக்கு போய்டுவாங்க. அப்புறம் இவரு எப்படி கட்சி நடத்தப்போறாருன்னு பாருங்க. எங்கள போல கட்சிக்காக உண்மையா உழைச்சவங்கள எல்லாம் ஏதாவது ஒரு சப்பை காரணத்தை சொல்லி வெளியில அனுப்பிட்டாரு. கொள்கையா இருக்கிறவங்க எண்ணிக்கை இப்போ மிக சொற்பம் தான். அவங்களும் சீக்கிரம் விலகிடுவாங்க. புதுசா இளசுகள் எல்லாம் இந்த கட்சிக்கு வரவும் மாட்டாங்க. அதனால், அவரு மட்டும் கட்சின்னு பேரு வச்சிட்டு சுத்திட்டு இருப்பாரு" என ஆதங்கத்தை கொட்டினார். குசும்பனும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என சொல்லி அவரை வழியனுப்பி வைத்தான்.


மேலும் படிக்க | உதயநிதி டி ஷர்ட் அணிவது அவரது அரை வேக்காடுத்தனத்தை காட்டுகிறது - ஜெயக்குமார்!


மேலும் படிக்க | கிசுகிசு : நடிகர் கட்சியை பார்த்து பதட்டத்தின் உச்சத்தில் கட்சி நடத்தும் பழைய இயக்குநர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ