Gossip News Tamil: வாக்கிங் சென்று விட்டு டீக்கடை பக்கம் வந்த குசும்பன், தன்னுடைய போனில் யாரிடமோ கோட்டை வட்டார தகவலை பரபரப்பாக சொல்லிக் கொண்டிருந்தான். "அண்ணே! ஓபாமா ஊருக்கு சென்றிருக்கும் முதன்மையானவர், இங்கு ரிட்டன் ஆனதும் பல அதிரடி மாற்றங்கள் நிகழப்போகுது. 2026 கோட்டை தேர்தலை மனதில் வைத்து இந்த பெரிய மாற்றம் நடக்க இருக்கிறது. கட்சி மற்றும் ஆட்சி என இரண்டிலும் மாற்றங்கள் நடக்க இருப்பதால், ஆளும் தரப்பை சேர்ந்த சில புள்ளிகள் இப்போதே கலக்கத்தில் இருக்கின்றனர். முதன்மையானவரின் ஹிட் லிஸ்டில் தங்களின் பெயரும் இருக்குமோ? என்பது தான்அவர்களின் பயத்துக்கு காரணமாம்." என சொல்லிக் கொண்டிருக்க, இதை காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த டீ மாஸ்டர், "என்ன குசும்பா.. காலையிலேயே பரபரப்பா இருக்க. என்ன விஷயம்?" என கேட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கிசுகிசு : நடிகர் கட்சியை பார்த்து பதட்டத்தின் உச்சத்தில் கட்சி நடத்தும் பழைய இயக்குநர்


"ஏன்ணே... எல்லா விஷயத்தையும் கேட்டுட்டீங்களே.! அப்புறம் என்ன?" என குசும்பன் சொல்ல, " கொஞ்சம் விலாவரியா சொல்லப்பா?" மாஸ்டர் கேட்டார். சொல்றண்ணே என கூறி கதையை ஆரம்பித்தான் குசும்பன். " அண்ணே! போனவாரம் கேபினட் மாற்றம் இல்லைனு முதன்மையானவர் சொன்ன உடனே, கலக்கத்தில் இருந்த மாண்புமிகுக்கள் அப்பாடா... என பெருமூச்சுவிட்டனர். ஆனால், ஓபாமா ஊருக்கு போறத்துக்கு முன்னால செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நான் வந்ததும் எல்லா மாற்றமும் கண்டிப்பாக இருக்கும்னு பொடி வச்சு சொல்லிட்டார் முதன்மையானவர். இதை கேட்டு தான், ரெண்டு நாள் நிம்மதியா இருந்த மாண்புமிகு சிலபேர் மீண்டும் கலக்கத்துக்கு போய்ட்டாங்க. 


இதுல என்ன விஷயமுன்னா... முதன்மையானவர் ஏற்கனவே கேபினட் மாற்றம் பட்டியலை தயார் பண்ணி வச்சிட்டார். அது சில மூத்த தலைகளுக்கு தெரிஞ்சிருச்சு. துறை மாற்றம் இருக்குன்னு தெரிஞ்சதும் மூத்த தலைகள் அதிருப்தி ஆயிட்டாங்க. குறிப்பா, காட்பாடியாருக்கு ஓய்வு கொடுக்கலாம்னு இதனடிப்படையில தான் முதன்மையானவர் தரப்பு கசிய விடவும், அவரு செம டென்ஷனாயிட்டாரு. இதனால, இந்த விஷயத்தை தள்ளிப்போட்டிருக்கும் முதன்மையானவர், வெளிநாடு பயணத்தை முடிச்சுட்டு வந்து மறுபடியும் சின்ன மாற்றம் செஞ்சு வெளியிடலாம்னு அந்த பட்டியலை அப்படியே வச்சிருக்காரு. 


இதுதவிர இன்னும் சிலருக்கு கல்தா கொடுக்கப்போற விஷயமும் தெரியவர, எப்படியாச்சும் முதன்மையானவர சமாதானம் பண்ணி மாண்புமிகு-வாகவே தொடரலாம்னு முயற்சி செஞ்சிட்டு இருக்காங்க. அதுக்காக வாரிசை கவரும் வேளையிலும் சில மாண்புமிகுக்கள் இறங்கிட்டாங்க. இப்போதைக்கு முதன்மையானவரின் கையில் இருக்கும் ஹிட்லிஸ்ட் டாப் சீக்ரெட்." என விலாவரியா சொல்ல, கதையை முழுசா கேட்ட திருப்தியுடன் ‘ஓகே குசும்பா இனி நான் வேளைய பாக்குறேன், நீ போய்டு வா என வழியனுப்பி வைத்தார்’ டீ மாஸ்டர்.


மேலும் படிக்க | கிசுகிசு : மாஜிக்கு ஜாமீன் தள்ளிப்போனதால் அதிரடி முடிவெடுத்த முதன்மையானவர்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ