பாஜக அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாறி விட்டது என புதுச்சேரி முதல்வர் V நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து தெரிவிக்கையில்., "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதுச்சேரியில் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கை கொடுத்துள்ளனர். கடந்த ஆண்டை விட கூடுதல் பயணிகள் வந்தனர்.


2020-ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலைகளை கொண்டு வரவேண்டும். புதிய சுற்றுலா திட்டங்களை கொண்டு வரவேண்டும்.. அனைத்து குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் 18 கோடி ரூபாய் மதிப்பில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு  திட்டம் ஏப்ரல் மாதத்திற்கு செயல்படுத்தப்படும். பல தடைகளுக்கும் இடையூறுகளுக்கு இடையில் பல துறைகளில் தேசிய அளவில் புதுச்சேரி முதலிடம் பெற்றுள்ளது.


பிரதமரின் ஆயூஷ் மான் திட்டத்தில் ஒரு லட்சத்து 3000 பேர் உள்ளனர். இதில் விடுபட்டவர்களை இணைக்கும் வகையில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்படும்.


இந்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் இத்திட்டம் கொண்டு வரப்படும், இத்திட்டத்திற்கு 18 கோடி ரூபாய் செலவிடப்படும் என தெரிவித்தார். மேலும் இதன் மூலம் அனைத்து குடும்பத்தினரும் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும் எனவும் அவர் குறிபிட்டார்.


தொடர்ந்து புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்து பேசிய அவர்., மாநில அதிகாரத்தில் ஆளுநர் தலையிட கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் அதனை புறந்தள்ளி போட்டி அரசு நடத்த கிரண்பேடி முயல்கிறார். மக்களை பாதிக்காமல் வரிவருவாயை பொருக்க அரசு முயற்சித்தால் கிரண்பேடி எதிர்கட்சிகளை தூண்டி விட்டு அவரது கருத்தை எதிர்கட்சிகளிடம் மனுவாக பெற்று தடை செய்கிறார். அவரது கருத்தை பாஜகவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் கடிதம் கொடுத்தது கிரண்பேடியால் தான். பாஜக அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாறி விட்டது.. என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.



தொடர்ந்து பேசிய அவர், அரசு நியமித்த மாநில தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனை நீக்க அரசுக்கு  ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். உள்ளாட்சி சட்டப்படி நியமித்த மாநில தேர்தல் ஆணையரை நீக்க முடியாது.. அவர் தனது கடமை செய்து வருகிறார்.. அவரை நீக்க கிரண்பேடிக்கும் உள்துறை அமைச்சகத்திற்கு அதிகாரமில்லை. கிரண்பேடியின் கடிதத்தை குப்பையில் போட வேண்டும். மத்திய அரசு கொடுத்த வழிமுறைகளை இனி வரும் காலங்களில் பின்பற்றலாம்." என தெரிவித்தார்.