அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவது எப்போது? அறிவிப்பு இதோ!
Colleges Re-opening: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதற்கான அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
உயர்கல்வித் துறை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு காலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் தொடங்கும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சச்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மொத்தம் 163 அரசு கலை கல்லூரிகள் உள்ளதாகவும் அதில் மொத்தம் 1,07,299 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சகம், தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதில், இதுவரை 75811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் (Rule of Reservation) மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
அரசு உதவிபெறும் கல்லூரிகள்-தனியார் கல்லூரிகள்:
அரசு கல்லூரிகல் திறப்பதற்கு முன்னதாகவே அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. கோடை வெயில் ஒருபக்கம் இருந்ததால், ஒரு சில மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. கோடைகாலம் முடிந்த நிலையில் தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளனர்.
அதிகம் விண்ணப்பிக்கபப்ட்ட கோர்ஸ்:
முன்னர் என்ஜினியரிங்க் மற்றும் மருத்துவ சீட் வாங்குவதற்கு மக்களும் மாணவர்களும் எவ்வளவு சிரமப்பட்டார்களோ, அதே அளவிற்கு தற்போது பி.காம் சீட் வாங்குவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் சி.ஏ அல்லது கணக்கியல் சம்பந்தப்பட்ட கோர்ஸ்களை படிக்க விரும்புவதால் இவ்வாறு பி.காம் சீட்டிற்கு மவுசு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மட்டுமன்ரி தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் பி.காம் கோர்சிற்குதான் அதிகம் பேர் விண்னப்பித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ