நோயாளிகளிடம் தரக்குறைவாக பேசும் அரசு பெண் மருத்துவர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், தரக்குறைவாகப் பேசும் பெண் மருத்துவர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவராக பணிபுரியாற்றி வருபவர் குமாரி. தினமும் காலை வழக்கம் போல பணிக்கு வரும் குமாரி, நீண்ட நேரமாக வரிசையில் காத்து நிற்கும், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்காமல்,அலட்சியப் படுத்துவதாகக் கூறப்படுகிறது.
அதை தட்டிக் கேட்கும் நோயாளிகளை மருத்துவர் குமாரி, தரக்குறைவாக பேசுவதாகவும் தெரிகிறது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிக்கடி சலசலப்பு ஏற்படுவது வழக்கமாக மாறிவிட்டது. இந்நிலையில், சம்பவத்தன்றும் அதேதான் நிகழ்ந்தது. காலை 8 மணி முதலே நோயாளிகளும், காய்ச்சலில் அவதிப்படும் குழந்தைகளைச் சுமந்துகொண்டு பெற்றோர்களும், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டத்தில், நாய் கடித்து வலியால் அலறி துடித்துக் கொண்டிருந்த சிறுவனும் ஒருவர்.
அதன் பின்னர், தாமதமாக பணிக்கு வந்த மருத்துவர் பணி செய்யாமல் வெளியில் அமர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். கூட்டத்தைப் பார்த்து வந்த போலீஸாரிடமும், தன்னுடைய கணவரிடமும் அந்த பெண் மருத்துவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க | செவிலியரின் முகத்தை கடித்து குதறிய நபர்... விருதுநகரில் பரபரப்பு
இந்த பகுதியை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கும் இதுதான் பெரிய மருத்துவமனை. இங்கு இதுபோன்ற ஒரு மருத்துவரை பணியில் அமர்த்தி மனித உயிர்களில் விளையாடி வருவது வேதனை அளிப்பதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சரியான மருத்துவரை பணிக்கு அமர்த்தி, உரிய நேரத்தில் மருத்துவர்கள் பணிக்கு வருவதை உறுதி செய்யவும் வேண்டும் என்று இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மேலும் படிக்க | ஜெயிலர் வீட்டிற்கு தீ - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata