கேரள மாநிலம் கண்ணூரில் வரும் 9ஆம் தேதி அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள பிற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்த அம்மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.


அதனை தொடர்ந்து இரு மாநிலங்களில் நடக்கும் அரசியல் ரீதியான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிக்கொண்ட அவர்கள் தமிழகம் கேரளா இடையே நிலவும் நட்புறவை மேம்படுத்தும் விதமாக புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். 


மேலும் படிக்க | அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்..? அறிக்கை வெளியிட்ட திமுக அரசு..!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR