சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார். தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என எதிர்பார்த்த நிலயில், ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் முடிவே தமிழக அரசின் முடிவாகும் எனக்கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியுடன் இன்று காலை காணொளி மூலம் பேசும் போது,  ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இன்று இரவு பிரதமர் நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். அப்பொழுது அவர் ஊரடங்கு உத்தரவு குறித்து அறிவிப்பார். 


வெறும் ஒரு மாநிலத்தில் மட்டும் ஊரடங்கு உத்தரவு போட்டால், அவ்வளவு பயனளிக்காது. எனவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் செய்தால் மட்டுமே பலன் அளிக்கும். அதனால் ஊரடங்கு உத்தரவு விவகாரத்தில் மத்திய அரசு என்ன சொல்கிறதோ? அதை தமிழக அரசு பின்பற்றும் என்று கூறினார்.


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என கொரோனா தொற்று குறித்து பரவுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழு நேற்று பரிந்துரை செய்தது குறிப்பிடதத்தக்கது.


இன்றைய ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு அதிகம் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் முடிவு தான் தமிழக அரசின் முடிவு எனக் கூறியுள்ளதால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


ஏற்கனவே மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி உட்பட சில மான் மாநிலங்கள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. 


முன்னதாக இன்று காலை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேசினார். 21 நாள் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-க்கு பிறகு தொடர வேண்டுமா இல்லையா என்பதை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் அரசு ஏப்ரல் 30 வரை நாடு தழுவிய லாக்-டவுனை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைத்தன.


அதேநேரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியுடன் காணொளி மூலம் பேசும் போது,  மாநிலத்தில் கொரோனா தொற்று எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை மற்றும் கொரோனா நிலைமையை குறித்து பேசினார். மேலும் தமிழகத்தில் COVID-19 தடுப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக ரூ.1000 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிட கோரிக்கை வைத்துள்ளார். 


மேலும் ஏற்கனவே தமிழக அரசு சார்பாக பிபிஇ, முகக் கவசங்கள் மருத்துவ பரிசோதனை உபகரணங்களை வாங்க ரூ. 3,000 கோடி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அந்த தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்