சென்னை: இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் 19 பேரை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவரம்: 


>டேன்ஜெட்கோ கண்காணிப்புப் பிரிவு டிஜிபியாக தமிழ்செல்வன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


> சென்னையில் குற்ற ஆவணப்பிரிவு டிஜிபியாக கரண் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். 


> கும்பகோணம் கோட்ட மாநில போக்குவரத்துக் கழக தலைமை கண்காணிப்பு அதிகாரியாக டிஜிபி ஜாங்கிட் மாற்றப்பட்டுள்ளார். 


> சென்னையில் தலைமைய கூடுதல் டிஜிபியாக சீமா அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


> தேர்தல் கால டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா மண்டபம் பணியிட முகாமுக்கு சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். 


Caption

> சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக கே.ஜெயந்த் முரளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


> சென்னை போக்குவரத்து போலீஸ் ஐஜி ஆகா பிமோத்குமார் இடமாற்றப்பட்டுள்ளார். 


> சிஐடி பிரிவு எஸ்பி எச்.ஜெயலட்சுமி பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஆணையராக சென்னையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


> தமிழ்நாடு சீருடைப் பணியார் தேர்வு வாரிய உறுப்பினராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரதோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


> பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏடி.ஜி.பி-யாக எம்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


> காத்திருப்போர் பட்டியலில் இருந்த என்.கே. செந்தாமரைக் கண்ணன் தலைமை அலுவலக ஐ.ஜி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


Caption

> சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய போலீஸ் கண்காணிப்பாளராக எஸ்.ராஜேஸ்வரி சென்னையில் நியமிக்கப்பட்டுள்ளார். 


> காவல்துறை தொழில்நுட்பபிரிவு ஏடிஜிபியாக அசோக்குமார் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


> ஆயுதப்படை போலீஸ் ஏடிஜிபி-யாக சங்கல் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


> சென்னை குற்றப்பிரிவு கூடுதல் டிஜபியாக ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


> கூடுதல் டி.ஜி.பி ஆபாஷ்குமார் சிறைத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டு உள்ளார். 


> ஊழல் தடுப்புத்துறை இணை இயக்குனர் எஸ்.முருகன் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 


Caption