முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படியே தற்போதைய ஆட்சியும் அடிபிறழாமல் பார்த்து வருகிறது என துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை பாண்டிகோவிலில் இன்று நடைபெற்ற அதிமுக ஆட்சியின் சாதனை சைக்கிள் பேரணியை துவங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றி பிரச்சாரத்தினை தொடங்கிவிட்டோம். அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முன்னிலை வகித்து வருகின்றது. பொது மக்களின் முழு ஒத்துழைப்போடு சிறப்பான ஆட்சியை அதிமுக நடத்தி வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.


கட்சியின் வலிமைக்கு ஒற்றுமை என்பது அவசியம். டிடிவி தினகரன், அதிமுக-விற்காக உழைத்தாரா? அவருக்கும், அதிமுக-விற்கும் என்ன தொடர்பு?, திமுக-வுடன் இணைந்துக்கொண்டு டிடிவி அதிமுகவை அழிக்க நினைக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும் ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவுகளை தூள் தூளாக்கி விட்டது அதிமுகவின் ஒற்றுமை. கொல்லைபுறமாக சிலர் ஆட்சியை பிடிக்க முயல்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து ஒற்றுமையாக அதிமுக வளர்ந்து நிற்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


அதேவேலையில் காவிரி பிரச்னைக்கான நல்ல தீர்வினை அதிமுக அரசு பெற்றுத் தந்து இருக்கின்றது. போராடி கிடைக்காத காவிரி நீர், தற்போது கேட்காமலேயே வந்துகொண்டிருக்கிறது’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக மதுரை மாவட்டம் "காளவாசல் மேம்பாலம்" அமைக்க ரூ 55 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பால திட்டப்பணிக்கு பூமிபூஜை போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். 


அப்போது இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர், ஜெ., முதல்வராக இருந்த போது என்ன என்ன மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினார்களோ, அதை தான் தற்போது தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படியே தற்போதைய ஆட்சியும் அடிபிறழாமல் பார்த்து வருகிறது என குறிப்பிட்டு பேசினார்.