மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் -கமல்ஹாசன்!
கொரோனா நோயாளிகளை மீட்டு கொண்டுவர போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரனங்களை வழங்கிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா நோயாளிகளை மீட்டு கொண்டுவர போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரனங்களை வழங்கிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.
உலக மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது (குணமடைந்தவர்கள் - 5; உயிரிழப்பு - 1; சிகிச்சை பெற்று வருபவர்கள் - 61). இதனிடையே கொடியோ கொரோனா பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்துவரையில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் 10000-க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் நலன் கருதி தங்கள் சொந்த குடும்பங்களை விலகி, உயிரை பணையம் வைத்து போராடி வருகின்றனர். எனினும் அவர்களின் போராட்டத்திற்கு தேவையான, போதிய மருத்துவ உபகரணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துக்கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி சாய்து முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்திய முதல்வர் பழனிசாமி அவர்கள்., மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு நலன் கருதி 25 லட்சம் N95 முக கவசங்களை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனாவை கண்டுபிடிக்கும் டெஸ்ட் கிட் (30 ஆயிரம்) ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு தனி சிகிச்சை அளிக்க தமிழகத்தில் 17,089 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன, மற்றும் 3018 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.