சென்னை போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கான பேச்சுவார்த்தையில் 13 முறை நடத்தியும் தீர்வு வரவில்லை. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.8 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதால், தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இதற்கிடையே, 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமல்படுத்த வேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தமும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.


என போக்குவரத்து தொழிலாளர்கள் ஆவேசமடைந்தனர். தலைமைக்கு எதிராக திரண்டு போராட்டம் நடத்தியதால் பல்லவன் இல்லம் முன் 5 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


இதற்கிடையே, அரசின் பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போக்குவரத்து கழக ஊழியர்கள் முன்வைத்தனர். தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும், ஓய்வூதிய பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்த போதிலும், அதற்கு பலன் இல்லை.


இதனால், கடும் அதிருப்தி அடைந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த செப்டம்பர் மாதம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்தனர். பின்னர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த வாக்குறுதியை ஏற்று வேலை நிறுத்த நோட்டீசை தொழிற்சங்க நிர்வாகிகள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். ஆனால், அமைச்சர் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை.


எனவே பணிக்கொடை மற்றும் ஓய்வூதியதை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஒப்பந்த பலன்களை ஓய்வூதியத்தோடு இணைந்து வழங்க வேண்டும் தமிழக அரசின் இதரத் துறை ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 48 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தை நேற்று துவக்கினர்.


இதனால் பெரும்பாலான அரசு பஸ்கள் செயல் படவில்லை.வடபழனி, கே.கே.நகர், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பல்வேறு டெப்போக்களில் இருந்து குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான பஸ்களும் ஓடவில்லை. இதனால் வெளியூர் செல்ல இருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர்.


சென்னையில், 40 சதவீதத்துக்கும் குறைவான அளவு பேருந்துகளே இயங்கியதால், அலுவலகங்களுக்கு சென்றவர்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் அவதிப்பட்டனர். 


இதேபோல் கடலூர், விழுப்புரம், திருப்பூர், சேலம், ஈரோடு, கோவை, தேனி, திருச்சி, புதுக்கோட்டை, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலானபேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. சில இடங்களில் தொழிலாளர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 


இந்த போராட்டத்தில் சிபிஎம் கட்சியின் சிஐடியூ, திமுகவின் தொமுச, சிபிஐ கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி, மதிமுக, தேமுதிக, விசிக கட்சிகளின் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர். 


இதையடுத்து இன்று அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.இந்த பேச்சுவார்த்தையில், தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன், சி.ஐ.டி.யூ. செயலாளர் ஆறுமுக நயினார் உள்பட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த 12 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 1.30 மணி முதல் 2.15 மணி வரை 45 நிமிடங்கள் நடைபெற்றது.


அதன்பின்னர், அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பல்லவன் இல்லத்திற்கு வந்தனர். அமைச்சருடன் பேசியது குறித்து தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம் தொழிலாளர்களிடம்எடுத்துரைத்தார். அவர், “நம்முடைய கோரிக்கைகளை அமைச்சரிடம் முன் வைத்தோம். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி எழுத்துப்பூர்வமாக உறுதி தர அமைச்சர் மறுத்துவிட்டார். அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. எனவே, நம்முடைய போராட்டத்தை முடித்துக்கொள்வோம்” என்று கூறினார்.


ஆனால் இதற்கு சில போக்குவரத்து கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் மாலை 6 மணிவரை நீடித்த மறியலை போலீஸார் ஒருவாராக கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து போக்குவரத்து சீரானது.