சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று "காஷ்மீர், இந்தியாவின் கிரீடம்" எனும் தலைப்பில் டி.கே.வி.ராஜன் எழுதிய மாணவர்கள் விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக அரசின் சார்பாக மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி வருகிறார். 


இவரின் இந்த ஆய்விற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், ஆளுநர் ஆய்வு நடத்தும் பகுதிகளில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


எனினும், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரல் புரோஹித் நேற்று(வெள்ளி) கடலூர் மாவட்ட அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியதுடன், 'ஸ்வச்ச் பாரத்' முன்முயற்சியின் ஒரு பகுதியாக தூய்மைப் பணிகளில் பங்கு பெற்றார். மேலும் கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில், அங்குள்ள கழிவறைகளை ஆய்வு செய்தார்.


பின்னர் அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்த ஆளுநர், அம்பேத்கர் நகரிலுள்ள மக்களிடம் குடிநீர், மின்சாரம் மற்றும் சாலைகள் உட்பட அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறுவதைப் பற்றி மக்களுடன் பேசினார். இந்நிகழ்வின் போது கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வாட்னெரையும் அவருடன் கலந்து கொண்டார். 


இதனையடுத்து இன்று காலை ‘Kashmir, the crown of India’ (காஷ்மீர், இந்தியாவின் கிரீடம்) எனும் தலைப்பில் திரு டி.கே.வி. எழுதிய மாணவர்கள் விழிப்புணர்வு புத்தகத்தை ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார்.