`ஆப்கானில் இருந்து தமிழ்நாடு வரும் ஹெராயின்...` ஆளுநர் ஆர்.என். ரவி பகீர் குற்றச்சாட்டு
Governor RN Ravi: தமிழ்நாட்டை போதை பொருட்கள் பெரிய அளவில் பாதிக்கிறது என்றும் கள்ளக்குறிச்சியில் நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
Governor RN Ravi On Kallakurichi Issue: போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'மற்ற ஆண்டுகளை போல இல்லாமல் ஒரு இருண்ட நிகழ்வுகள் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள நேரத்தில் இந்த உலக போதை பொருள் தடுப்பு தின நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. நான் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு எண்ணற்ற பெற்றோர்கள் என்னிடம் கல்லூரி மற்றும் பள்ளிகளில் உள்ள போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டி கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தற்போது வரை அதை நாம் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து...
இதுகுறித்து நான் அதிகாரிகளிடம் கேட்டால் இங்கு கஞ்சா மட்டுமே உள்ளது. மற்ற போதைப் பொருள்கள் இல்லை என கூறுகிறார்கள், ஆனால் பெற்றோர்கள் சிந்தடிக் ட்ரக்ஸ் உள்ளது என கூறுகின்றனர். அவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியும்போது, இங்கு இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தெரியாமல் உள்ளது.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம் : 59பேர் உயிரிழப்பு.. தேமுதிகவினர் ஆர்பாட்டம்
முதலில் இங்கு போதைப் பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து நாம் வெளியே வரவேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை கேள்விக்குறியாகும். விசாரணை மேற்கொண்டதில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிலர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் உள்ள ஒரு சிலருடன் இணைந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஹெராயின் இறக்குமதி செய்கின்றனர்" என ஆளுநர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும் அவர், போதை பொருளினால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை நம் நாடு பார்த்துள்ளது. பஞ்சாப் மாநிலம் இதற்கு எடுத்துகாட்டாக உள்ளது. 1980கள் வரை பஞ்சாப் மாநிலம் வேளாண் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறி இருந்தது. ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் போதை பொருள் என்ன செய்துள்ளது என்பதை நாம் பார்த்துள்ளோம்.
ஏற்றுக்கொள்ள முடியாது
மேலும் அவர்,"தமிழ்நாட்டை போதை பொருட்கள் பெரிய அளவில் பாதிக்கிறது. கடந்த ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் உயிரிழப்புக்கு பின் கைது நடைபெற்றது. அதன் பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை ?. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா? சம்பவம் நடைபெறும் மூன்று நாட்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது ஆனால் அதன் பின் வழக்கம் போல மாறிவிடுகின்றன தொடர்ந்து உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டும் அதேபோல மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. போதைப் பொருட்கள் வெளியில் இருந்து வரவில்லை, இங்கேயே உருவாக்கப்படுகிறது" என்றார்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழங்குவதை விரைந்து தடுத்திட வேண்டும் என்ற ஆளுநர் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டார்களா என தமிழக அரசிடம் ஆளுநர் கேள்வியெழுப்பி உள்ளார்.
மேலும் கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம், சங்கராபுரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். பலருக்கும் கண்பார்வை பறிபோயுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இதுசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
தலைவர்கள் கோரிக்கை
இருப்பினும், கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுசார்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை வைத்தனர். இன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் ஆளுநரை இன்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.
மேலும் படிக்க | விஷச்சாராய விவகாரத்தில் மேலும் 7 பேர் கைது - தீவிர விசாரணை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ