தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு மற்றும் அதிமுக கட்சி பாஜக-வின் பிடியில் சிக்கி உள்ளது. மத்திய அரசின் தலையீடு அதிகரித்து வருகிறது. 


பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை அமுடல் அமைச்சர் ஒரு குழு அமைத்து தேர்வு செய்வார். பின்னர் அந்த பட்டியலை கவர்னருக்கு சிபாரிசு செய்வார். இதுதான் வழக்கம்.


ஆனால் இப்போது கவர்னர் நேர்காணல் நடத்துகிறார். இங்கு கவர்னர் ஆட்சிதான் நடப்பதுபோல் தெரிகிறது.


திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள ராகுல்காந்தி ஜூன் 3-ம் தேதி சென்னை வருகிறார். கருணாநிதியை ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசுகிறார். 


இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.